ஜனாதிபதியின் யாழ். விஜயம் தொடர்பாக பரவி வரும் செய்திகள் தவறானவை!

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் அண்மைய யாழ் விஜயத்திற்காக மூன்று விமானங்கள் பயன்படுத்தப்பட்டதாக வெளியான செய்திகள் தவறானவை என்று பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது.

அதன்படி, கடந்த 31 ஆம் திகதி யாழ்ப்பாணத்திற்கான தனது பயணத்திற்காக ஜனாதிபதி இலங்கை விமானப்படை விமானங்களைப் பயன்படுத்தியதாக சமூக ஊடகங்களில் பரவும் செய்தி முற்றிலும் தவறானது எனவும், இந்தப் பயணத்திற்கு இலங்கை விமானப்படையின் எந்த விமானமும் பயன்படுத்தப்படவில்லை என்றும், ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ வாகனம் மட்டுமே பயன்படுத்தப்பட்டதாகவும் பாதுகாப்பு அமைச்சு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

 

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply