
அரச சேவைகளை டிஜிட்டல் மயமாக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
அதன்படி ‘Govpay’ திட்டத்தை அரசாங்கம் அறிமுகப்படுத்துகின்றது.
பாதுகாப்பான மற்றும் வினைத்திறனான டிஜிட்டல் முறை மூலம் தடையின்றி கொடுக்கல் வாங்கல் செய்யக்கூடியவாறு இத்திட்டம் அறிமுகப்படுத்தப்படுகின்றது.
இத்திட்டத்தின் மூலம் அரச நிறுவனங்களுடனான கொடுக்கல் வாங்கல்களை சீரமைத்து நவீனமயப்படுத்த எதிர்பார்க்கப்படுவதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதன் பூர்வாங்க நிகழ்வு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் பெப்ரவரி 7ஆம் திகதி நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.