
77ஆவது தேசிய சுதந்திர தின கொண்டாட்டம் சுதந்திர சதுக்கத்தில் நடைபெற்றது.
இதற்கு ஜனாதிபதி கலந்துகொள்ள வரும்போது ஆம்புலன்ஸ்கள் அல்லது பிற துணை வாகனங்கள் எதுவும் இல்லாமல், மூன்று பொலிஸ் மோட்டார் சைக்கிள்களின் பாதுகாப்புடன் வருகை தந்திருந்தார்.
அதேபோல பிரதமரும் மற்ற விருந்தினர்களும் வந்தபோதும், ஒரே ஒரு பொலிஸ் மோட்டார் சைக்கிள் மட்டுமே முன்னால் வந்தது.
கடந்தகால சுதந்திர தின கொண்டாட்டங்களில் ஜனாதிபதி மற்றும் பிற தலைவர்கள் தங்கள் மனைவிகள் மற்றும் கணவர்களுடன் பலத்த பாதுகாப்புடன் வருகை தருவார்கள்.
ஆனால் இந்த முறை அப்படி எதுவும் இல்லாமல் எளிமையாக அரசியல் பிரமுகர்கள் சுதந்திர கொண்டாட்டத்தில் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.