
இலங்கையின் 77வது சுதந்திர தினம் இன்று கொண்டாடப்பட்டு வரும் நிலையில், சுதந்திர தினத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சில இடங்களில் கறுப்பு கொடி ஏந்தி போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
அந்தவகையில் இன்று யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திலும் சுதந்திர தினத்தை கரிநாளாக பிகடனப்படுத்தி, பிரதான கொடி கம்பத்தில் பறந்த தேசிய கொடி மாணவர்களால் இறக்கப்பட்டு கறுப்புக் கொடி ஏற்றப்பட்டடுள்ளது.
அத்துடன் பல்கலைகழகதின் சுற்றுப்புறத்திலும் கறுப்புக் கொடிகள் பறக்கவிடப்பட்டிருக்கின்றன.