நீர் கட்டணத்தை 10 முதல் 30 சதவீதம் வரை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.
மின்சாரக் கட்டணத்தில் ஏற்பட்ட மாற்றத்துக்கு அமைவாக அதனோடு ஒப்பிட்டு நீர் கட்டணங்களையும் குறைப்பதற்கு கவனம் செலுத்தப்பட்டு வருகின்றது.
நீர் கட்டணத்தை குறைப்பது தொடர்பில் ஆராய குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளதோடு, குறித்த குழுவின் அறிக்கை அடுத்த சில நாட்களுக்குள் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தலைவரிடம் சமர்ப்பிக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்டுகின்றது.
தலைவரிடம் சமர்ப்பிக்கப்பட்ட குறித்த அறிக்கையை, விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சரிடம் கையளிப்பார் என்றும், பின்னர் அது தொடர்பான முன்மொழிவுகள் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
