
நெல் கிலோ ஒன்றின் விலை தொடர்பில் அதிகாரபூர்வ அறிவிப்பு இன்று (05) வெளியிடப்படும் என விவசாய பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்திருந்த நிலையில், நெல் கிலோ ஒன்றுக்கான அதிகபட்ச விலையை அரசாங்கம் சற்று முன்னர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
அதன்படி, சிவப்பு நெல் கிலோ ஒன்றின் அதிகபட்ச விலை 120 ரூபாய் எனவும், சம்பா நெல் கிலோ ஒன்றின் அதிகபட்ச விலை 125 ரூபாய் எனவும், கீரி சம்பா நெல் கிலோ ஒன்றின் அதிகபட்ச விலை 132 ரூபாய் எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
நாடளாவிய ரீதியில் பல பகுதிகளில் உள்ள விவசாயிகள் மற்றும் விவசாய அமைப்புகள் தற்போதைய நெல் கொள்முதல் விலைகள் குறித்து விசனம் தெரிவித்து வந்த பின்னணியிலேயே, அரசாங்கம் இதனை அறிவித்துள்ளது.