
அரச சேவைகளை டிஜிட்டல் மயமாக்க அரசாங்கம் ‘Govpay’ திட்டத்தை அறிமுகப்படுத்துகின்றது.
அதன்படி இதன் ஆரம்ப நிகழ்வு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று (7) நடைபெறவுள்ளது.
பாதுகாப்பான மற்றும் வினைத்திறனான டிஜிட்டல் முறை மூலம் தடையின்றி கொடுக்கல் வாங்கல் செய்யக்கூடியவாறு இத்திட்டம் அறிமுகப்படுத்தப்படுகின்றது.
இத்திட்டத்தின் மூலம் அரச நிறுவனங்களுடனான கொடுக்கல் வாங்கல்களை சீரமைத்து நவீனமயப்படுத்த எதிர்பார்க்கப்படுகிறது.
இது தொடர்பாக டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன கருத்து வௌியிடுகையில்,
“இந்தக் கட்டண வசதி தற்போது 16 அரச சேவைகளுக்கு அறிமுகப்படுத்தப்படுகிறது. ஏப்ரல் மாதத்திற்குள் மேலும் 30 சேவைகளுக்கு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க முடியுமென எதிர்பாரக்கிறோம். எதிர்காலத்தில், இந்த முறை மூலம் பணம் செலுத்துவதற்கான செலவை 15 ரூபாவினால் குறைக்கவும் நாங்கள் நடவடிக்கை மேற்கொள்வோம்” என்றார்.