
நெல்லுக்கான அதிகபட்ச விலையை மாசி 5ஆம் திகதி அரசாங்கம் நிர்மாணித்திருந்த நிலையில், தற்போது நிர்ணயிக்கப்பட்ட விலை போதுமானதாக இல்லை எனவும், நெல்லுக்கான விலை உரிய நேரத்தில் நிர்ணயிக்கப்படவில்லை எனவும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
கிளிநொச்சி மாவட்டத்தின் பெரும்போக அறுவடை நிறைவடையும் நிலையில் அரசாங்கத்தினால் நெல்லுக்கான விலை நிர்ணயிக்கப்பட்டது.
அதன்படி, சிவப்பு நெல் கிலோ ஒன்றின் அதிகபட்ச விலை 120 ரூபாய் எனவும், சம்பா நெல் கிலோ ஒன்றின் அதிகபட்ச விலை 125 ரூபாய் எனவும், கீரி சம்பா நெல் கிலோ ஒன்றின் அதிகபட்ச விலை 132 ரூபாய் எனவும் நிர்ணயிக்கப்பட்டிருந்தது.
இம்முறை நிலவிய சீரற்ற வானிலை காரணமாக விவசாயிகளுக்கு இழப்பீடு ஏற்பட்டது.
இந்நிலையில் 10,000 ரூபாவுக்கு கூட நெல்லை விற்பனை செய்தாலும் எமது நட்டத்தினை ஈடு செய்ய முடியாத நிலையில் விவசாயிகளாகிய நாங்கள் உள்ளோம் என கவலை தெரிவிக்கின்றனர்.