ரஷ்ய இராணுவத்தில் இணைந்த 59 இலங்கையர்கள் உயிரிழப்பு!

2025 ஜனவரி 20 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் ரஷ்ய இராணுவத்தில் இணைந்துள்ள இலங்கையர்களில் 59 பேர் உயிரிழந்துள்ளதாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.ஶ்ரீதரன் இன்று (07) எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது வெளிவிவகார அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில்,

ரஷ்ய இராணுவத்தில் 554 இலங்கையர்கள் இணைந்துள்ளதாகவும், அவர்களில் யாரும் வலுக்கட்டாயமாக ஆட்சேர்ப்பு செய்யப்படவில்லை என்றும் தெரியவந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

அத்துடன் அவர்கள் இந்த நாட்டிலுள்ள தங்கள் உறவினர்களுடன் தொடர்பைப் பேணுவதற்குத் தேவையான வசதிகளை வழங்குமாறு ரஷ்யாவில் உள்ள இலங்கைத் தூதரகத்திற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது” என்றும் தெரிவித்தார்.

 

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply