
ஐக்கிய தேசியக் கட்சியுடன், ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணி அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து சஜித் பாதுகாப்பு இயக்கம், நாளை (08) ஐக்கிய மக்கள் சக்தி கட்சி தலைமையகத்தில் கண்டனப் போராட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளது.
‘ரணிலின் முடிச்சில் சிக்கிக் கொள்ளாதீர்கள்’ என்ற தொனிப்பொருளில் இந்த கண்டனப் போராட்டம் நாளை (08) இடம்பெறவுள்ளது.
போராட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் ஆதரவாளர்கள் பலரும் கலந்து கொள்ளவுள்ளதாக தகவல் தெரியவருகின்றது.
குறித்த கண்டனப் போராட்டம் தொடர்பில் மேலதிக தகவல்களை அறிந்துகொள்ள 071 6631043 என்ற இலக்கத்தை தொடர்பு கொள்ளுமாறு சஜித் பாதுகாப்பு இயக்கம், ஐக்கிய மக்கள் சக்தி ஆதரவாளர்களிடம் கேட்டுக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.