டுபாயில் கைது செய்யப்பட்ட பல குற்றச் செயல்களுடன் தொடர்புடைய இலங்கையர்கள்!

நாட்டில் இடம்பெற்ற பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடையதாகத் தேடப்பட்டு வந்த மூன்று சந்தேக நபர்கள் டுபாயில் கைது செய்யப்பட்டிருந்த நிலையில் இன்று (07) அவர்கள் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

இலங்கை பொலிஸினால் வழங்கப்பட்ட அறிவித்தலின்படி, சர்வதேச பொலிஸார் குறித்த சந்தேக நபர்களுக்கு சிவப்பு அறிக்கையை வௌியிட்டிருந்தனர்.

அதன்படி குறித்த மூன்று சந்தேக நபர்களையும் குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் குழுவொன்று, இன்று காலை UL-226 ரக விமானத்தில் கட்டுநாயக்கவில் உள்ள பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு அழைத்து வந்துள்ளது.

இவ்வாறு நாட்டுக்கு அழைத்து வரப்பட்ட சந்தேக நபர்கள் செய்ததாகக் கூறப்படும் குற்றங்கள் குறித்த விபரங்களையும் பொலிஸ் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ளது.

ரன்முனி மஹேஷ் ஹேமந்த சில்வா
வயது – 42
முகவரி – புவக்கஹ தோட்டம், மாகந்த, ஊரகஸ்மந்சந்தி

22.01.2024 அன்று பெலியத்த பொலிஸ் பிரிவின் பெலியத்த வலஸ்முல்ல வீதியில் உள்ள கஹவத்த பகுதியில் டிஃபென்டர் வாகனத்தில் பயணித்த ஐந்து பேரைக் கொலை செய்த சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த சந்தேகநபரான இவருக்கு தங்காலை நீதவான் நீதிமன்றத்தால் திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சந்தன என்றும் அழைக்கப்படும் கந்தகம தெனியே கெதர பிரதீப் சந்தருவான்
வயது – 40
முகவரி – ஸ்ரீ ஆனந்தாராம மாவத்தை, கொலன்னாவை

18.06.2023 அன்று வெல்லம்பிட்டிய பொலிஸ் பிரிவில் துப்பாக்கியால் சுட்டு ஒருவரை கொலை செய்ய முயன்ற வழக்கில் தேடப்படும் சந்தேக நபருக்கு புதுக்கடை இலக்கம் 02 நீதவான் நீதிமன்றத்தால் திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

2022.01.31 வெல்லம்பிட்டி பொலிஸ் பிரிவில் துப்பாக்கியால் சுட்டு ஒருவரை காயப்படுத்தி கொலை முயற்சி.

2021.06.30 வெல்லம்பிட்டி பொலிஸ் பிரிவில் துப்பாக்கியால் சுட்டு ஒருவரை கொலை செய்தமை.

2023.06.05 வெல்லம்பிட்டி பொலிஸ் பிரிவில் துப்பாக்கியால் சுட்டு கொலை முயற்சி.

2023.06.05 வெல்லம்பிட்டி பொலிஸ் பிரிவில் துப்பாக்கியால் சுட்டு கொலை முயற்சி.

2023.02.15 வெல்லம்பிட்டி பொலிஸ் பிரிவில் ஒருவர் மீது தாக்குதல் மேற்கொண்டு வீட்டு சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுத்தியமை.

ரொடும்ப உபாலி என்று அழைக்கப்படும் நாடகந்தகே உபாலி
வயது – 39
முகவரி – புவக்வத்த, தென்கந்தலிய

01.10.2008 அன்று அக்குரஸ்ஸ பொலிஸ் பிரிவில் ஒருவரை கத்தியால் குத்தி கொலை செய்த வழக்கில் தேடப்படும் சந்தேக நபராவார், மேலும் மாத்தறை மேல் நீதிமன்றத்தால் திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

16.04.2008 அன்று மாவரல பொலிஸ் பிரிவில் நடந்த துப்பாக்கிச் சூடு மற்றும் கொலைச் சம்பவத்தில் சந்தேக நபராவார், மேலும் மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது.

ஊருபொக்க பொலிஸ் பிரிவில் 15 வயது சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் தொடர்பாக மாத்தறை மேல் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply