மரண வீட்டில் தகராறு- கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு நால்வர் வைத்தியசாலையில்!

மொறட்டுவை – எகொடஉயன பகுதியில் உள்ள வீடொன்றில் இடம்பெற்ற இறுதிச் சடங்கு நிகழ்வில் ஏற்பட்ட தகராறில் கத்திக்குத்துக்கு இலக்காகி பெண் உட்பட நால்வர் காயமடைந்துள்ளதாக எகொடஉயன பொலிஸார் தெரிவித்தனர்.

பெண் ஒருவர் தொடர்பில் ஏற்பட்ட வாக்குவாதத்தில், ஆண் ஒருவரால் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டதில், பெண் உட்பட காயமடைந்த நான்கு பேரும் பாணந்துறை ஆதார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து தாக்குதலை மேற்கொண்ட சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட கத்தியும் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை எகொடஉயன பொலிஸார் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply