இடைநிறுத்தப்பட்டிருந்த மத்திய அதிவேக பாதை அமைக்கும் பணிகள் மீண்டும் ஆரம்பம்!

இடைநிறுத்தப்பட்டிருந்த மத்திய அதிவேக பாதையை அமைக்கும் பணிகள் மீண்டும் ஆரம்பமாக உள்ளதாக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் அண்மைய சீன பயணத்தின் போது இந்தத் திட்டம் தொடர்பாக இடம்பெற்ற கலந்துரையாடல்களைத் தொடர்ந்து கட்டுமானப் பணிகளைமீண்டும் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அவர் கூறியுள்ளார்.

இத் திட்டத்துடன் தொடர்புடைய நிதிக்கு சீனாவின் EXIM வங்கியிடமிருந்து ஒப்புதலை இலங்கை எதிர்பார்க்கிறது என்றும், இதன் முதல் கட்ட கட்டப் பணிகள் அடுத்த இரண்டு மாதங்களுக்குள் தொடங்கப்படும் என்றும் அவர் ஊடகங்களுக்கு கூறியுள்ளார்.

 

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply