ஐக்கிய மக்கள் சக்திக்குள் ஏற்பட்டுள்ள உள் நெருக்கடிகள் காரணமாக ஐக்கிய தேசியக் கட்சியுடனான கலந்துரையாடல்கள் தடைப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஐக்கிய தேசியக் கட்சியும், ஐக்கிய மக்கள் சக்தியும் எதிர்வரும் தேர்தல்களில் ஒன்றிணைந்து போட்டியிடுவது குறித்த பேச்சுவார்த்தைகள் அண்மைக்காலமாக இடம்பெற்று வந்திருந்தது.
இது தொடர்பான பல சுற்று கலந்துரையாடல்கள் இரு கட்சிகளுக்குள்ளும் மேற்கொண்டு வந்திருந்த போதும் தற்போது அவை நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஆனாலும் பேச்சுவார்த்தைகளில் இருந்து தங்கள் கட்சி இன்னும் விலகவில்லை என்று ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.
இதற்கிடையில் ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க, தனது கட்சிக்குள் ஏற்பட்டுள்ள உள் நெருக்கடிகள் காரணமாக இரு கட்சிகளுக்கும் இடையே சமீபத்தில் நடைபெற்று வரும் கலந்துரையாடல்களில் இருந்து விலகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
