வட மாகாணத்தில் உள்ள அனைத்துப் பாடசாலைகளுக்கும் மகா சிவராத்திரி பண்டிகையை முன்னிட்டு விசேட விடுமுறை வழங்கப்படவுள்ளதாக வட மாகாண ஆளுநர் நா. வேதநாயகம் தெரிவித்துள்ளார்.
சிவனுக்காக கொண்டாடப்படும் முக்கிய தினமான மகா சிவராத்திரி பண்டிகை எதிர்வரும் புதன்கிழமை இரவு (மாசி 26) அனுஷ்ட்டிக்கப்படவுள்ளது.
அதனை முன்னிட்டு எதிர்வரும் வியாழக்கிழமை (மாசி 27) வட மாகாணத்தில் உள்ள அனைத்துப் பாடசாலைகளுக்கும் விசேட விடுமுறை வழங்கப்படுகின்றது.
எனினும் அவ் விடுமுறைக்கு பதிலாக மார்ச் மாதத்தின் முதல் சனிக்கிழமை வகுப்புகளை நடத்த ஒழுங்கு செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
