இலங்கை ரஜரட்ட பல்கலைக்கழக வேந்தர் ராஜினாமா!

இலங்கை ரஜரட்ட பல்கலைக்கழக வேந்தர் வணக்கத்திற்குரிய கல்லேல்லே சுமனசிறி தேரர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

வணக்கத்திற்குரிய கல்லேல்லே சுமனசிறி தேரர் கடந்த மாசி 10ஆம் திகதி இலங்கை ரஜரட்ட பல்கலைக்கழக வேந்தராக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவால் நியமிக்கப்பட்டிருந்தார்.

இந்த நிலையில் நேற்றைய தினம் இவர், ஜனாதிபதி செயலாளருக்கு கடிதம் மூலம் தனது இராஜினாமா கடிதத்தை சமர்ப்பித்துள்ளார்.

தமது இந்த பதவி பிரிவினையை ஏற்படுத்தினால் அல்லது முரண்பாடுகளை ஏற்படுத்தினால் அல்லது சங்கத்தின் ஒற்றுமை சீர்குலைவதற்கு வழிவகுத்தால், பதவியை விட சங்க நல்லிணக்கத்தைப் பேணுவதையே தாம் முக்கியமாகக் கருதுவதாக தேரர் தனது கடிதத்தில் குறிப்பிட்டதாகக் கூறப்படுகிறது.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply