
நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவர்களது பாதுகாப்பு தொடர்பில் தேவையான நடவடிக்கை எடுக்குமாறு சபாநாயகரிடம் கோரிக்கை முன்வைத்த நிலையில், சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்ரமரத்ன இது தொடர்பில் இன்று(21) நாடாளுமன்றத்தில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.
அதாவது, நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவர்களது பாதுகாப்பு தொடர்பில் தேவையான நடவடிக்கை எடுக்குமாறு தொடர்ந்து தனக்கு முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் குறித்து பரிசீலனை செய்ததன் பின்னர், அது தொடர்பில் பொருத்தமான நடவடிக்கை எடுப்பதற்காக, பதில் பொலிஸ் மா அதிபருக்கு அக்கோரிக்கைகள் ஆற்றுப்படுத்தப்பட்டுள்ளதாக சபாநாயகர் சபையில் அறிவித்தார்