அதிகாலையில் பேருந்து தீக்கிரையாகியதில் ஒருவர் பலி!

இன்று அதிகாலையில் உடமலுவ பொலிஸ் பிரிவில் உள்ள சேதவனாராமய அருகில் பேருந்து ஒன்று தீப்பிடித்து எரிந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த பேருந்து எம்பிலிப்பிட்டிய பிரதேசத்திலிருந்து அநுராதபுரம் பிரதேசத்திற்கு யாத்ரீகர்கள் குழுவுடன் வந்து ஓய்வு விடுதி ஒன்றில் தங்கியிருந்துள்ளனர்.

இதன் போதே அவர்கள் வந்த பேருந்தில் தீப்பிடித்துள்ளது.

இச்சம்பவத்தில் பேருந்தில் இருந்த ஒருவர் தீயில் சிக்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

எம்பிலிப்பிட்டிய பிரதேசத்தை சேர்ந்த 55 வயதுடைய நபரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

அநுராதபுரம் நகர சபையின் தீயணைப்பு பிரிவு, அநுராதபுரம் பொலிஸ் மற்றும் உடமலுவ பொலிஸ் இணைந்து தீயை கட்டுப்படுத்திய போதும் பேருந்து முழுமையாக எரிந்து தீக்கிரையாகியுள்ளது.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை உடமலுவ பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

 

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply