இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்கள் மீது வாகனம் மோதி 6 பேர் காயம்- யாழில் சம்பவம்!

யாழில் இடம்பெற்ற இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்கள் மீது வேகமாக பயணித்த வாகனம் மோதியதில் 6 பேர் காயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் தெரியவருவது,

நேற்றைய தினம் (21) யாழ். கோப்பாய் – கைதடி வீதியில் உள்ள இந்து மயானத்திற்கு பூதவுடலை எடுத்து சென்றவர்கள் மீது, அவ் வீதியில் வேகமாக வந்த வாகனம் மோதி தள்ளி விட்டு அவ்விடத்தில் இருந்து தப்பி சென்றுள்ளது.

விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பி சென்ற வாகனம் தொடர்பில், கண்காணிப்பு கமராக்களின் காணொளிகள் அடிப்படையில் தேடிவருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை கோப்பாய் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply