கணேமுல்ல சஞ்சீவ கொலை சம்பவம்- வலைவீசி தேடப்படும் செவ்வந்தி!

கணேமுல்ல சஞ்சீவ கொலையில் உடந்தையாக இருந்து செயற்பட்ட 25 வயது சந்தேக நபரான இஷாரா செவ்வந்தியைத் தேடுவதற்காக நாடு முழுவதும் சிறப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த பெண் சட்டத்தரணி போல் வேடமணிந்து நீதிமன்றத்துக்கு துப்பாக்கியைக் கொண்டு வந்தவரென அடயாளம் காணப்பட்டிருந்தது.

இந்த நிலையில் குறித்த பெண்ணை கைது செய்வதற்காக தேடுதல் நடவடிக்கைகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டுள்ளன.

சந்தேகநபரான குறித்த பெண் கொலை சம்பவத்துக்கு பின்னர் நாட்டை விட்டு தப்பி சென்றுள்ளதாகவும் தகவல் வெளியானது.

எனினும் அந்தப் பெண் நாட்டில் தங்கியிருப்பதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில் நேற்று தெஹிவளை மற்றும் மதுகமவின் பல இடங்களில் சிறப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இருப்பினும் குறித்த பெண் தொடர்பில் எந்த தகவலும் கிடைக்கவில்லை.

இந்த சூழ்நிலையில் சந்தேகநபரான குறித்த பெண்ணின் பாட்டி, தாய் மற்றும் சகோதரர் ஆகியோருக்கு கொலை மிரட்டல்கள் வந்ததாகக் கூறி நீர்கொழும்பு வீதி, ஜெயா மாவத்தையில் உள்ள தங்கள் வீட்டை விட்டு வெளியேறியுள்ளமை தெரியவந்துள்ளது.

இதற்கிடையில் கணேமுல்ல சஞ்சீவ கொலை சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட மேலும் மூன்று சந்தேக நபர்கள் 48 மணி நேர தடுப்புக்காவல் உத்தரவின் பேரில் விசாரணைக்காக பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்தக் கொலை தொடர்பாக எட்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர், அவர்களில் இருவர் பொலிஸ் கான்ஸ்டபிள்கள் மற்றும் இரண்டு முன்னாள் கமாண்டோக்கள் அடங்குவதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

 

 

 

 

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply