பாதுகாப்புப் படைகளில் இருந்து தப்பிச் சென்றுள்ள அனைவரையும் உடனடியாக கைது செய்யுமாறு பாதுகாப்புச் செயலாளர் ஓய்வுபெற்ற விமானப்படையின் ஏர் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொந்தா உத்தரவிட்டுள்ளார்.
ஆயுதப் பயிற்சி பெற்ற பின்னர் சட்டவிரோதமாக இராணுவத்தை விட்டு வெளியேறும் பலர் பாதாள உலக குழுக்களுடன் தொடர்பு கொள்ளும் போக்கு அதிகரித்து வருவதாக, பாதுகாப்பு செயலாளர் ஏர் வைஸ் மார்ஷல் (ஓய்வு) சம்பத் துய்யகொந்தா அரசாங்க தகவல் திணைக்களத்தில் கடந்த 22ஆம் திகதி நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போது தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் நாட்டில் இடம்பெறும் குற்றச்செயல்களை தடுக்கும் நோக்கத்தில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு செயலாளர் தெரிவித்துள்ளார்.
