கொட்டாஞ்சேனை துப்பாக்கிச் சூட்டு சம்பவம்- மற்றுமொரு சந்தேக நபர் கைது!

கொட்டாஞ்சேனை பகுதியில் கடந்த 21ஆம் திகதி கடை ஒன்றில் இருந்த நபர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய மற்றுமொரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு வடக்கு குற்றப் புலனாய்வு அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் நேற்று (23) முகத்துவாரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மெத்சந்த செவன பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டார்.

குறித்த சந்தேகநபர், கொட்டாஞ்சேனையில் துப்பாக்கிச் சூடு நடத்தியவருக்கு துப்பாக்கி மற்றும் ரவைகளை வழங்கிய குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளார்.

முகத்துவாரம் பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரிடம் மேற்கொண்ட விசாரணையின் போது, அவர் வெளிநாட்டில் மறைந்திருக்கும் திட்டமிட்ட குற்றச் செயல்களில் ஈடுபட்டுவரும் போதைப்பொருள் கடத்தல்காரருடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணி, இந்த நாட்டில் குற்றச் செயல்களை நடத்தி வருபவர் என்பது தெரியவந்துள்ளது.

அத்துடன் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மேலதிக விசாரணைகளுக்காக கொட்டாஞ்சேனை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை கொட்டாஞ்சேனை பொலிஸார் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply