எதிர்காலத்தில் மின்சாரக் கட்டணங்கள் அதிகரிக்கலாம்- எரிசக்தி அமைச்சர்!

எதிர்காலத்தில் மின்சாரக் கட்டணங்கள் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக எரிசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடி தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

மின்சார சபை 140 பில்லியன் ரூபா லாபத்தைப் பதிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. இது முற்றிலும் பொய் என்று கூறிய அவர், இலங்கை மின்சார சபை லாபத்தைப் பதிவு செய்யவில்லை. ஆனால் மின்சார உற்பத்திக்குப் பயன்படுத்தப்படும் நிலுவைகளை மட்டுமே பதிவு செய்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும், நிலவும் வறட்சி நிலைமைகளைப் பொறுத்து மின்சார உற்பத்தி செலவுகள் அதிகரிக்கக்கூடும் என்று எரிசக்தி அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply