
பாதாள உலகக் குழு தலைவர் கணேமுல்ல சஞ்சீவவின் கொலை தொடர்பில் கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவு இரகசிய அறிக்கை ஒன்றை கொழும்பு நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளது.
கணேமுல்ல சஞ்சீவவின் கொலை சம்பவம் தொடர்பில் கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவு விசாரணைகளை முன்னெடுத்துவந்திருந்த நிலையில், கொழும்பு தலைமை நீதவான் தனுஜா லக்மாலியின் உத்தியோகபூர்வ அறையில் இது தொடர்புடைய அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிக்கைக்கு அமைவாக நீதிமன்றம் பொலிஸாருக்கு பல உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. அதன்படி, பூஸா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகள் குழுவிடமிருந்து வாக்குமூலங்கள் பெறப்பட உள்ளன.