நாட்டில் தற்போது நிலவும் மழையுடன் கூடிய வானிலையால் பதுளை மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது.
பதுளை மாவட்டத்தில் பசறை, ஹாலி எல, கந்தகெட்டிய, பதுளை, ஹப்புத்தளை, மீகஹகிவுல, ஊவாபரணகம மற்றும் சொர்ணா தொட்ட ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும், நுவரெலியா மாவட்டத்தின் வலப்பனே ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும் மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பை தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ளது.
