இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்குச் சொந்தமான எரிபொருள் நிரப்பு நிலையங்களை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு மாற்ற அரசாங்கம் முயற்சிப்பதாக சந்தேகம் எழுந்துள்ளதாக இலங்கை பெற்றோலிய விநியோகஸ்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதற்காக அரசாங்கம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்த பெற்றோலிய விநியோகஸ்தர்கள் சங்கத்தின் துணைத் தலைவர் குசும் சதநாயகே, இன்று (03) காலை ஜனாதிபதி செயலகத்திற்குச் சென்று எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்களின் 3 சதவீத கழிவுக் கொடுப்பனவு குறைப்பு தொடர்பான மகஜர் ஒன்றை கையளிக்கவுள்ளதாகவும் தெரிவித்தார்.
இதற்கிடையில், லங்கா இந்தியன் ஒயில் நிறுவனத்தின் விநியோகஸ்தர்களும் எரிபொருள் முன்பதிவுகளை நிறுத்தி வைக்க முடிவு செய்துள்ளனர்.
பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் செல்வாக்கு காரணமாக, ஒரு ஆர்டருக்கு 35,000 நட்டம் ஏற்படுவதாக அதன் தலைவர் கோசல விதானராச்சி தெரிவித்தார்.
எவ்வாறாயினும், நாட்டில் போதுமான அளவு எரிபொருள் கையிருப்பு இருப்பதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் வரை எரிபொருள் கையிருப்பு வைக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக அதன் தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நேற்று 1,500க்கும் மேற்பட்ட எரிபொருள் பதிவுகள் பெறப்பட்டுள்ளதுடன்,. பெற்றோலிய இருப்புக்கள் விநியோகிக்கப்படுவதாகவும் தெரிவிக்ககப்பட்டுள்ளது.
தற்போதுள்ள பிரச்சினைகள் குறித்து எரிபொருள் விநியோகஸ்தர்கள் மற்றும் அரசாங்க பிரதிநிதிகளுக்கு இடையே நாளை கலந்துரையாடல் நடைபெறவுள்ளது.
இதன்படி, படி நாளை காலை 9.00 மணிக்கு கலந்துரையாடலில் பங்கேற்பதாக பெற்றோலிய விநியோகஸ்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், எண்ணெய் விநியோகம் தொடர்பாக எழுந்துள்ள பிரச்சினையை கட்டுப்படுத்த அரசாங்கத்திற்கு தொலைநோக்கு பார்வை இல்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குறிப்பிட்டார்.
நொச்சியாகம பகுதியில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
