மீண்டும் மொட்டுக் கட்சியில் லக்‌ஷ்மண் யாப்பா!

வடமேல் மாகாணம் மற்றும் தென் மாகாணத்தில் முன்னாள் ஆளுநராக இருந்த லக்‌ஷ்மண் யாப்பா அபேவர்த்தன ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுண கட்சியில் மீண்டும் இணைந்து கொண்டுள்ளார்.

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் மொட்டுக் கட்சியில் இருந்து விலகி, முன்னாள் ஜனாதிபதி ரணிலுக்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொண்டிருந்தார்.

கடந்த பொதுத் தேர்தலின் பின்னர் அரசியலை விட்டு ஒதுங்குவதாக அறிவித்த லக்‌ஷ்மண் யாப்பா, தற்போது மொட்டுக் கட்சியில் மீண்டும் இணைந்து கொண்டுள்ளதுடன் அக்கட்சியின் மாத்தறை மாவட்ட தலைவராகவும் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply