உள்ளூராட்சி மன்ற தேர்தல்- தபால் மூலம் வாக்களிப்பவர்களுக்கு தேர்தல் ஆணைக்குழுவின் அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கு தபால் மூலம் வாக்களிக்கத் தகுதியுள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வதற்கான கால அவகாசம் 03ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வதற்கான கால அவகாசம் எதிர்வரும் 12ஆம் திகதி நள்ளிரவு 12.00 மணியுடன் நிறைவடைவதுடன், இந்த திகதி எச்சந்தர்ப்பத்திலும் நீடிக்கப்படமாட்டாது என அறிக்கை ஒன்றை வெளியிட்டு தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

தபால் மூல விண்ணப்பப் படிவங்களை மாவட்ட தேர்தல் அலுவலகங்களில் அல்லது தேர்தல் ஆணைக்குழுவின் உத்தியோகபூர்வ இணையத்தளமான (www.elections.gov.lk) க்கு பிரவேசித்து பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும் என ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

விண்ணப்பதாரர்கள் முறையாகப் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை குறித்த திகதிக்குள் அந்தந்த மாவட்ட தேர்தல் அலுவலகத்தில் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

 

 

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply