யால தேசிய பூங்கா வீதிகள் மீண்டும் திறப்பு!

கடந்த சில நாட்களாக நிலவிய மழையுடன் கூடிய வானிலையால் யால தேசிய பூங்காவின் வீதி அமைப்புக்கு ஏற்படும் சேதத்தை குறைப்பதற்கும், அதன் மூலம் அங்குள்ள சுற்றுச்சூழல் அமைப்புக்கு ஏற்படும் பாதிப்பை குறைப்பதற்காகவும் மார்ச் 01 ஆம் திகதி முதல் யால தேசிய பூங்கா தற்காலிகமாக மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.

எனினும் யால தேசிய பூங்காவின் சில வீதிகளை இன்று (05) முதல் மீண்டும் திறக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக வனவிலங்கு பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது.

இருப்பினும், மழை காரணமாக சேதமடையக்கூடிய வீதிகள் தொடர்ந்து சுற்றுலாப் பயணிகளுக்கு மூடப்பட்டிருக்கும் என தெரிவிக்கப்படுகிறது.

இன்று காலை யால தேசிய பூங்காவில் பெய்யும் மழையின் அளவைப் பொறுத்து இந்த நிலைமையில் சில மாற்றங்கள் ஏற்படலாம் என்று வனவிலங்கு பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply