வெளிநாட்டு பெண்ணிடம் இலஞ்சம் கோரிய பொலிஸ் உத்தியோகத்தர்கள் கைது!

வெளிநாட்டு பெண்ணிடம் இலஞ்சம் கோரிய குற்றச்சாட்டில் மூன்று பொலிஸ் உத்தியோகத்தர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஆஸ்திரியா நாட்டு பெண்ணிடம், வௌிநாட்டு சிகரெட்டுகள் தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்காமல் இருப்பதற்காக 50,000 ரூபா இலஞ்சம் கோரியமையாலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஒரு சார்ஜென்ட் மற்றும் 2 கான்ஸ்டபிள்கள் உள்ளிட்ட மூவருமே இந்த குற்றத்துக்காக கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply