தேர்தல்களில் வாக்களிப்பதற்கு சிறைக் கைதிகளுக்கும் உரிமை வழங்கப்படுவது குறித்து தற்போது தீவிர கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
அதன்படி இந்த உரிமை சந்தேகநபர்களாக சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளுக்கு மாத்திரமே வழங்கப்படவுள்ளது.
தண்டனைக் கைதிகளாக உள்ளவர்களுக்கு வாக்குரிமை வழங்குவதற்கான ஏற்பாடுகளை செய்ய முடியாது என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இது தொடர்பான சட்ட வரைபு ஒன்றை உருவாக்கும் விடயத்தில் கவனம் செலுத்தப்பட்டுக் கொண்டிருப்பதாக சட்ட மா அதிபர், உச்சநீதிமன்றத்துக்கு அறிவித்துள்ளார்.
எனினும் சிறைச்சாலைகளில் வெவ்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த பலர் தடுத்து வைக்கப்பட்டுள்ளதால், அவர்களுக்கான வாக்களிக்கும் உரிமைகளை வழங்குவது நடைமுறைச் சிக்கல்களை உருவாக்கும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
