கணேமுல்ல சஞ்சீவ கொலை சம்பவம்- சந்தேகநபர்களுக்கு மீண்டும் விளக்கமறியல்!

கணேமுல்ல சஞ்சீவ கொலை சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 9 சந்தேக நபர்களையும், எதிர்வரும் 21 ஆம் திகதி வரை மேலும் விளக்கமறியலில் வைக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொழும்பு பிரதான நீதவான் தனுஜா லக்மாலி இந்த உத்தரவை பிறப்பித்தார்.

குறித்த சந்தேக நபர்கள் இன்று (07) ஸ்கைப் தொழில்நுட்பத்தின் மூலம் கொழும்பு பிரதான நீதவான் தனுஜா லக்மாலி முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply