சுற்றுலாத் தலங்களாக மாறவுள்ள அஞ்சல் நிலையங்கள்!

இலங்கையின் முக்கியமான நகரங்களிலுள்ள அஞ்சல் நிலையங்களைச் சுற்றுலாத் தலங்களாக மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

இதற்காக அஞ்சல் துறையின் கீழ் ஒரு புதிய திட்டமொன்று ஆரம்பிக்கப்படுமெனவும், நுவரெலியா, கண்டி, கொழும்பு மற்றும் காலி ஆகிய பகுதிகளிலுள்ள அஞ்சல் நிலையங்கள் இதற்காக அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

அஞ்சல் துறையை இலாபம் ஈட்டும் நிறுவனமாக மாற்ற இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply