ஹட்டன் பகுதியில் அரச பேருந்து நடத்துநர் ஒருவர் பாடசாலை மாணவர்களை பலவந்தமாக பஸ்ஸில் இருந்து வெளியேறுமாறு பணித்த சம்பவம் ஒன்று நேற்று (06) இடம் பெற்றது.
இது தொடர்பான காணொளி சமூக வலைத்தளங்களில் பரவி வந்த நிலையில், போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்னாயக்க இது தொடர்பில் இன்று (07) நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.
அவர் கூறியதாவது,
குறித்த பேருந்து நடத்துநருக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணைகள் நடத்தப்படவுள்ளது. அவரை பணியிடை நீக்கம் செய்வதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளதாக கூறினார்.
விசாரணைகள் நிறைவடையும் வரையில் அவரை மீண்டும் பணியில் இணைத்து கொள்ளாதிருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.
