
வெலிகந்த பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மஹிந்தகம பிரதேசத்தில் பழங்காலப் பொருட்களை பெறும் நோக்கில் சட்டவிரோதமாக அகழ்வு நடவடிக்கையில் ஈடுபட்ட சந்தேகநபர் ஒருவர் வெலிகந்த பொலிஸ் நிலைய அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
வெலிகந்த பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த சந்தேகநபர் நேற்று (09) கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் 28 வயதுடைய அசேலபுர பிரதேசத்தைச் சேர்ந்தவராவார்.
இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை வெலிகந்த பொலிஸார் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.