உலகப் புகழ்பெற்ற பாடகர் ஆலோ பிளாக் இலங்கைக்கு விஜயம்!

உலகப் புகழ்பெற்ற அமெரிக்க பாடகர் எலோ பிளாக் இலங்கைக்கு மூன்று நாட்கள் விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.

அதன்படி அவர் இன்று (10) காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததுடன், அவரை இலங்கை சுற்றுலா அபிவிருத்தி பணியக அதிகாரிகள் மற்றும் பேராசிரியர் கோமிகா உடுகமசூரிய ஆகியோர் வரவேற்றனர்.

இலங்கையில் சுகாதாரத் துறையில் முதலீட்டுத் திட்டத்தைத் ஆரம்பிப்பது குறித்து கலந்துரையாடுவதற்காக அவர் இங்கு வருகை தந்துள்ளார்.

ஜனாதிபதியின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்திற்கான சிரேஸ்ட ஆலோசகர், அமெரிக்காவின் ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் கோமிகா உடுகமசூரியவின் அழைப்பின் பேரில் அவர் இலங்கைக்கு வருகை தந்துள்ளார்.

 

 

 

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply