அனுராதபுரம் போதனா வைத்தியசாலையின் வைத்தியர்களுக்கான விடுதியில் திங்கட்கிழமை (10) இரவு பெண் வைத்தியர் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்ததாகக் தெரிவிக்கப்படும் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேக நபர் இராணுவத்திலிருந்து தப்பியோடியவர் என்றும், அவரைக் கைது செய்ய ஐந்து பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால நேற்று நாடாளுமன்றில் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் குறித்த சந்தேக நபர் கல்னேவ பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவத்தின் அடிப்படையில், அனுராதபுரம் போதனா வைத்தியசாலையின் சுகாதார ஊழியர்களின் பாதுகாப்பை உறுதி செய்யக் கோரி வைத்தியர்கள் உட்பட அனைத்து சுகாதார ஊழியர்களும் தொடர்ச்சியான தொழிற்சங்க நடவடிக்கையை ஆரம்பித்துள்ளனர்,
அத்துடன் அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கமும் இன்று (12) நாடளாவிய ரீதியில் வேலைநிறுத்த போராட்டத்தை ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
