யாழில் 17 உள்ளூராட்சி சபைகளிலும் தேசிய மக்கள் சக்தி ஆட்சி அமைக்கும்- கடற்றொழில் அமைச்சர்!

எதிர்வரும் உள்ளூராட்சி தேர்தலில், யாழ்ப்பாணத்தில் உள்ள 17 உள்ளூராட்சி சபைகளிலும் தேசிய மக்கள் சக்தி ஆட்சி அமைக்கும் என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலுக்காக இன்று (13) காலை யாழ்ப்பாணத்தில் உள்ள 17 உள்ளூராட்சி சபைகளுக்குமான அங்கிகரிக்கப்பட்ட முகவர்களை நியமிக்கும் நடவடிக்கைகளுக்காக யாழில் உள்ள தேர்தல்கள் அலுவலகத்திற்கு வருகைதந்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்களான கருணைநாதன் இளங்குமரன், ஜெயச்சந்திரமூர்த்தி றஜீவன், சண்முகநாதன் ஸ்ரீபவனந்தராஜா, தொகுதி அமைப்பாளர்கள் உள்ளிட்ட கட்சி உறுப்பினர்கள் சிலரும் வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply