கொழும்பு – கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வெஹெரகொடெல்ல பிரதேசத்தில் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு இரு சகோதரர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
இன்று (15) அதிகாலை இந்த கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளது.
23 மற்றும் 24 வயதுடைய சகோதரர்கள் இருவரே இவ்வாறு வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
இரு தரப்பினருக்கு இடையில் ஏற்பட்ட தகராறு காரணமாக இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
தாக்குதலில் காயமடைந்த இரண்டு சகோதரர்களும் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த கொலை சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை கிராண்ட்பாஸ் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
