பதவி துறந்தார் எம்.பி சாலி நழீம்- சபாநாயகர் அறிவிப்பு!

நாடாளுமன்ற உறுப்பினரான சாலி நழீம், நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துள்ளதாக சபாநாயகர் இன்று (15) பாராளுமன்றத்திற்கு அறிவித்தார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினராக விளங்கிய இவர், எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஏறாவூர் நகரசபைக்கு போட்டியிடுவதற்காக தான் பதவி விலகுவதாக கூறி நேற்று (14) விசேட உரையொன்றை நிகழ்த்தி நாடாளுமன்றில் தெரிவித்திருந்தார்.

சாலி நழீம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியப் பட்டியல் ஊடாக பாராளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply