இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஏப்ரல் மாதத்தின் முதல் வாரமளவில் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் விஜித ஹேரத் இன்றைய நாடாளுமன்ற அமர்வில் தெரிவித்தார்.
பிரதமர் மோடியின் இந்த பயணத்தின் போது இரு நாடுகளுக்கும் இடையே பல புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்திட திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் விஜித ஹேரத் குறிப்பிட்டார்.
