இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட பொலிஸ் கான்ஸ்டபிள்!

ஆராச்சிகட்டுவ பொலிஸ் நிலையத்தில் பணியாற்றி வரும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் நேற்று (14) கைது செய்யப்பட்டார்.

அடிப்பல பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் அளித்த முறைப்பாட்டின் அடிப்படையில் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

வெளிநாடு செல்வதற்குத் தேவையான பொலிஸ் அறிக்கையை வழங்குவதற்காக முறைப்பாட்டாளரிடம் முதலில் 2,000 ரூபா இலஞ்சம் கேட்கப்பட்டதாகவும், பின்னர் அதிலிருந்து 500 ரூபாவை கழித்து 1,500 ரூபாவை இலஞ்சமாக கோரியதாகவும் கூறப்படுகிறது.

இதன் பிரகாரம் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால், பண்டாரஹேனவில் உள்ள கைசர் பைபிள் தேவாலயத்தில் வைத்து நேற்று பிற்பகல் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் சிலாபம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply