SK Vlog யூடியூப்பருக்கு பிணை வழங்க மறுத்த நீதிமன்றம்!

SK Vlog என்ற பெயரில் யூரியூப் சனல் ஒன்றினை நடாத்தி வருகின்ற கிருஷ்ணா கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.

யூடியூப்பர் கிருஷ்ணாவின் வழக்கு நகர்த்தல் பத்திரம் மூலம் நேற்று மல்லாகம் நீதிமன்றத்தில் பிணைக்கு அனுமதி கோரி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இது தொடர்பில் விசாரணை மேற்கொண்ட மல்லாகம் நீதிமன்றம் யூரியூபர் கிருஷ்ணாவிற்கு பிணை வழங்க மறுத்து, வழக்கை எதிர்வரும் 19ஆம் திகதிக்கு ஒத்திவைத்துள்ளது.

SK Vlog என்ற பெயரில் யூரியூப் சனல் ஒன்றினை நடாத்தி வருகின்ற கிருஷ்ணா உதவி செய்கின்ற காணொளிகளை பதிவேற்றம் செய்து வருகிறார்.

அவர் தனது தளத்தில் வெளியிட்ட காணொளி பதிவில் பெண் தலைமைத்துவ குடும்பம் ஒன்றின் வீட்டுக்குள் உட்புகுந்து அங்குள்ள பெண் பிள்ளை ஒன்றை தேவையற்ற வார்த்தைகளை பயன்படுத்தி இழிவுபடுத்தி பேசியமாய் பலர் மத்தியிலும் அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது.

இளவாலை காவல்துறை பிரிவிற்குட்பட்ட பண்டத்தரிப்பு பகுதியில் உள்ள பெண் தலைமைத்துவ குடும்பம் ஒன்றின் வீட்டுக்குள்ளேயே இவ்வாறு அத்துமறி உள் நுழைந்து குறித்த காணொளியை பதிவு செய்துள்ளார்.

இந்த நிலையில் குறித்த யூடியூப்பர் நேற்றைய தினம் அந்த வீட்டுக்கு மீண்டும் செல்ல முயன்ற வேளை பண்டத்தரிப்பு – சில்லையூர் மத்தி இளைஞர்களால் மடக்கி பிடிக்கப்பட்டு இளவாலை காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டார். இதன்போது அவருடன் இன்னும் மூன்றுபேர் என மொத்தமாக நால்வர் காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

அதன்படி கைதுசெய்யப்பட்ட யூடியூபர் கிருஷ்ணா உள்ளிட்ட நால்வரையும் 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த நிலையில் நகர்த்தல் பத்திரம் மூலம் பிணை மனு கோரி நேற்று மல்லாகம் நீதிமன்றில் வழக்கு இடம்பெற்றது.

இதன் போது மல்லாகம் நீதிமன்றம் யூரியூபர் கிருஷ்ணாவிற்கு பிணை வழங்க மறுத்து, வழக்கை எதிர்வரும் 19ஆம் திகதிக்கு ஒத்திவைத்துள்ளது.

 

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply