அதிகரிக்கப்பட்ட சம்பள உயர்வு தொடர்பில் அரச ஊழியர்களுக்கு மகிழ்ச்சி தகவல் !

வரவு செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்களுக்கு அதிகரிக்கப்பட்ட சம்பள உயர்வு ஏப்ரல் முதல் வழங்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழ் சிங்கள புத்தாண்டை கொண்டாடும் வகையில், மாத சம்பளம் வழங்குவதற்கான வழக்கமான திகதிக்கு முன்னதாக ஏப்ரல் 10 ஆம் திகதி அவற்றை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் எதிர்வரும் 21 ஆம் திகதி நிறைவேற்றப்பட்ட பின்னர், ஒரு வார காலப்பகுதியில் அதிகரிக்கப்பட்ட சம்பளம் மற்றும் ஊக்கத் தொகைகள் தொடர்பான சுற்றறிக்கையை வெளியிட அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

சுற்றறிக்கை வெளியிடப்பட்டதை தொடர்ந்து, ஏப்ரல் மாதம் 10 ஆம் திகதி அரசு ஊழியர்களுக்கு உயர்த்தப்பட்ட சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply