மிதிகம, பத்தேகம பகுதியில் உள்ள வீடொன்றின் மீது இன்று (17) அதிகாலை துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
துப்பாக்கிச் சூட்டின் காரணமாக வீட்டின் முன் ஜன்னல் மற்றும் சுவரில் பல தோட்டாக்கள் பாய்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
எனினும் இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தின் போது எவருக்கும் பாதிப்பு ஏற்பவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
துப்பாக்கிச் சூட்டுக்கான காரணமோ அல்லது சந்தேக நபர்கள் தொடர்பான தகவலோ இதுவரை தெரியவரவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மிதிகம பொலிஸார் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
