இன்றைய தீர்ப்புக்கு முன்னர் தேசபந்து தென்னகோனின் சட்டதரணிகள் சீராக்கல் மனு தாக்கல்!

மாத்தறை நீதவான் நீதிமன்றம் தன்னை கைது செய்ய பிறப்பித்த உத்தரவை இரத்து செய்யக் கோரி முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் தாக்கல் செய்த ரிட் மனு மீதான தீர்ப்பு இன்று (17) அறிவிக்கப்படவுள்ள நிலையில், அவரது சட்டதரணிகள் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் சீராக்கல் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளனர்.

மாத்தறை நீதவான் நீதிமன்றம் முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனை கைது செய்ய பிறப்பித்த உத்தரவை நிறுத்தி வைக்குமாறு கோரி, அவரது சட்டதரணிகள் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் சீராக்கல் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளனர்.

இந்த வழக்கு தொடர்பான வேறு பல ஆவணங்களை சமர்ப்பிக்க அனுமதி வழங்குமாறும் குறித்த சீராக்கல் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் கோரப்பட்ட இடைக்கால தடை உத்தரவு பிறப்பிக்கப்படுமா? இல்லையா? என்பது தொடர்பான தீர்ப்பு இன்று (17) அறிவிக்கப்படவுள்ள நிலையில், தேசபந்து தென்னகோனின் சட்டத்தரணிகள் ஊடாக குறித்த சீராக்கல் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply