கொழும்பு சென்ற அரச பேருந்து விபத்து- 12 பேர் காயம்!

நிக்கவெரட்டியவிலிருந்து – கொழும்பு சென்ற இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து விபத்துக்குள்ளானதில் 12 பேர் காயமடைந்துள்ளனர்.

குறித்த விபத்து சிலாபம் – புத்தளம் வீதியில் பந்துலு ஓயா பகுதியில் இன்று (17) காலை இடம்பெற்றுள்ளது.

பேருந்து வீதியை விட்டு விலகி அருகிலுள்ள மரத்தில் மோதியதால் விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக சிலாபம் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்து சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply