24 மணி நேர வேலைநிறுத்தத்தை நடாத்த சுகாதார நிபுணர்களின் கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது.
அதன்படி நாளை (18) காலை 7.00 மணிக்கு ஆரம்பமாகி 24 மணி நேர வேலை நிறுத்தத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர்.
நிதி அமைச்சுடன் நடைபெற்ற கலந்துரையாடலுக்குப் பின்பு ஊடகங்களுக்கு கருத்து தெருவிக்கும் போதே சுகாதார நிபுணர்களின் கூட்டமைப்பின் தலைவர் ரவி குமுதேஷ் இதனைத் தெரிவித்தார்.
சுகாதார நிபுணர்கள் கூட்டமைப்பின் பிரதிநிதிகளுக்கும், நிதி அமைச்சின் அதிகாரிகளுக்கும் இடையிலான கலந்துரையாடல் தோல்வியடைந்ததே இந்த போராட்ட முடிவுக்கு காரணமென தெரிவிக்கப்படுகிறது.
