வவுனியாவில் இளைஞர் ஒருவரின் சடலம் மீட்பு!

வவுனியா பகுதியில் இன்று (17) காலை இளைஞர் ஒருவரின் சடலம் பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த சடலம் வவுனியா தேவகுளம் வயல்வெளி பகுதியில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.

மறவன்குளம் பகுதியைச் சேர்ந்த முனிரத்தினம் கருணா என்ற 23 வயது இளைஞனே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சடலம் இருப்பதை அவதானித்த ஊர் மக்கள் காவல்துறையினருக்கு தகவல் வழங்கியதன் அடிப்படையில் காவல்துறையினர் சடலத்தை மீட்டுள்ளனர்.

குறித்த சடலம் காணப்படும் பகுதிக்கு அருகில் அவர் கொண்டு வந்த பை, பாதணி மற்றும் தலைக்கவசம் ஆகியன காணப்படிருந்தது.

அத்துடன் குறித்த பகுதிக்கு வெளியில் உள்ள வீதியில் மோட்டார் சைக்கிளும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததாகவும் குறிப்பிடப்படுகின்றது.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை ஈச்சங்குளம் பொலீசார் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply