கொழும்பு – கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஜபோஸ்லேன் பகுதியில் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு இரு இளைஞர்கள் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக 8 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த கொலை சம்பவம் நேற்று முன்தினம் (15) சனிக்கிழமை அதிகாலையில் இடம்பெற்றிருந்தது.
சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை கிராண்ட்பாஸ் பொலிஸார் முன்னெடுத்திருந்த நிலையில், சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
சம்பவம் தொடர்பில் நேற்று (16) இரவு வெல்லம்பிட்டி பகுதியில் 16 முதல் 44 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் குழுவொன்றை பொலிஸார் கைது செய்தனர்.
சந்தேக நபர்களிடமிருந்து இரண்டு கத்திகள் மற்றும் ஒரு கையடக்க தொலைபேசி என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. அவை குற்றத்திற்கு பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை கிராண்ட்பாஸ் பொலிஸார் மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
